வத்தல் குழம்பு
வத்தல் குழம்பு தேவையான பொருட்கள்: புளி - ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்கயம் - 10 பூண்டு - 10 சுண்டைக்காய் வத்தல் - ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளி வத்தல் - ஒரு கைப்பிடி அளவு உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி - சிறிது கடுகு - சிறிதளவு உளுந்தம் பருப்பு - சிறிது வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் - 5 அல்லது 6 மல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் மிளகு - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீ ஸ்பூன் கறிவேப்பிலை - 1 கொத்து வெந்தயம் - 10 எண்ணம் செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மல்லி விதை,துவரம் பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம் , காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் நன்கு சிவக்க(பிரவுன்) வறுக்க வேண்டும். வறுத்த பொருட்கள் ஆறிய பிறகு 3 அல்லது 4 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு மைய (மசிய) அரைத்து கொள்ளவும். வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சுண்டக்காய் வத்தல்,மணத்தக்காளி வத்தல் இவற்றை தனித் தனியாக வறுத்து பின்பு வாணலியி...