Posts

வத்தல் குழம்பு

Image
வத்தல் குழம்பு தேவையான பொருட்கள்: புளி - ஒரு கைப்பிடி அளவு  சின்ன வெங்கயம் - 10  பூண்டு - 10  சுண்டைக்காய் வத்தல் - ஒரு கைப்பிடி அளவு  மணத்தக்காளி வத்தல் - ஒரு கைப்பிடி அளவு  உப்பு - தேவையான அளவு  நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி - சிறிது  கடுகு - சிறிதளவு உளுந்தம் பருப்பு - சிறிது வறுத்து அரைக்க:   காய்ந்த மிளகாய் - 5  அல்லது 6 மல்லி விதை - 2  டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் மிளகு - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீ ஸ்பூன் கறிவேப்பிலை - 1 கொத்து வெந்தயம் - 10 எண்ணம்   செய்முறை:   வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மல்லி விதை,துவரம் பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம் , காய்ந்த மிளகாய் இவை  அனைத்தையும் நன்கு சிவக்க(பிரவுன்) வறுக்க வேண்டும்.    வறுத்த பொருட்கள் ஆறிய பிறகு 3 அல்லது 4 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு மைய (மசிய) அரைத்து கொள்ளவும்.   வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சுண்டக்காய் வத்தல்,மணத்தக்காளி வத்தல் இவற்றை தனித் தனியாக வறுத்து பின்பு  வாணலியி...

காடை தம் பிரியாணி

Image
காடை தம் பிரியாணி தேவையானவை:  காடை – 4,  சீரகச் சம்பா அரிசி - 750 கிராம்,  பெரிய வெங்காயம்- 150 கிராம்,  தக்காளி - 100 கிராம்,  பச்சை மிளகாய் – 5,  புதினா இலை,  கொத்தமல்லித்தழை - 50 கிராம்,  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,  மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,  தயிர் - 50 மில்லி,  தேங்காய்ப்பால் - 100 மில்லி,  பட்டை, ஏலக்காய் – 2,  கிராம்பு – 4,  பிரிஞ்சி இலை – ஒன்று,  இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்,  உப்பு - தேவையான அளவு,  எண்ணெய் - 100 மில்லி,  நெய் - 50 மில்லி. பிரியாணி மசாலா செய்ய:   பட்டை – 2,  ஏலக்காய் – 4,  கிராம்பு – 6,  பூண்டு - 50 கிராம்,  இஞ்சி-1 துண்டு. செய்முறை:  சீரகச் சம்பா அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும். பிரியாணி மசாலாவுக்கு தேவையான பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை...

மட்டன் குழம்பு

Image
  மட்டன் குழம்பு! தேவையானவை:   மட்டன் - அரை கிலோ பெரிய வெங்காயம்  - 100 கிராம்,  இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,  கொத்தமல்லித்தழை – சிறிதளவு,  எண்ணெய் - 30 மில்லி,  உப்பு – தேவைக்கேற்ப. அரைக்க:   நறுக்கிய பெரிய வெங்காயம் - 50 கிராம்,  தேங்காய்த்துருவல் - 30 கிராம்,  காய்ந்த மிளகாய் – 8,  முழுமல்லி - 2 டீஸ்பூன்,  சீரகம் - அரை டீஸ்பூன்,  வெள்ளை எள் - ஒன்றரை டீஸ்பூன்,  கசகசா - 2 டீஸ்பூன், கிராம்பு – 2 செய்முறை:  மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து, ஆறவைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கி, பின்னர் ஊறவைத்திருக்கும் மட்டனைச் சேர்த்து நன்றாக வதக்கவும்...

ஈரல் பொரியல்

Image
 ஈரல் பொரியல்      தேவையான பொருட்கள் ஆட்டின் ஈரல் - 200 கிராம் வெங்காயம் - 2 இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி தயிர் - 50 கிராம் மிளகு தூள் - 2 கிராம் கொத்துமல்லி, கறிவேப்பிலை உப்பு தா‌ளி‌க்க சோ‌ம்பு, க‌றிவே‌ப்‌பிலை, எ‌ண்ணெ‌ய்  தயாரிக்கும் முறை ஆட்டின் ஈரலை வேகவைத்து பின்னர் அலசி வே‌ண்டு‌ம் அள‌வி‌ற்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஈரலில் உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். ஒரு பச்சை மிளகாயையும் கீறிப் போட்டு வதக்கவும்.  பின்னர் ஈரலை வாணலியில் போட்டு லேசாகக் கிளறி விடவும். இறக்கும்போது கொத்துமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

நண்டு ரசம்

Image
நண்டு ரசம்    தேவையானவை  நண்டு கால்கள் - 10 புளி - நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு ஒரு முழு பூண்டு ரச‌ப் பொடி - 3 தே‌‌க்கர‌ண்டி ம‌ஞ்ச‌ள் பொடி - 1ஃ2 தே‌க்கர‌ண்டி காய்ந்த மிளகாய் - 4 கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு, எண்ணெய் - தா‌ளி‌க்க செய்யு‌ம் முறை நண்டின் கால்களை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து அ‌ம்‌மி‌க் குழ‌வி அ‌ல்லது ம‌த்து வை‌த்து அத‌ன் ஓடுக‌ள் உடைபடு‌ம் அள‌வி‌ற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.  பூ‌ண்டையு‌ம் நசு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். பு‌ளியை ரச‌த்‌தி‌ற்கு ஏ‌ற்றவாறு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கரை‌த்து வை‌த்து‌க் கொ‌‌ள்ளு‌ங்க‌ள். பு‌ளி‌க் கரைச‌லி‌ல், ரச‌‌ப்பொடி, உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் பொடி, த‌ட்டி வை‌த்‌தி‌ரு‌க்கு‌ம் ந‌ண்டு கா‌ல்க‌ள், பூ‌ண்டு ‌விழுது ஆ‌கியவ‌ற்றை‌ப் போடவு‌ம். ரச‌த்தை தா‌ளி‌த்து அடு‌ப்‌பி‌ல் வை‌த்து கொ‌தி‌க்க ‌விடவு‌ம்.  ந‌ண்டு வெ‌ந்து, ரச‌ம் கொ‌தி‌த்தது‌ம் கொ‌த்தும‌ல்‌லி, ‌க‌றிவே‌ப்‌பிலை தழைகளை‌ப் போ‌ட்டு இற‌க்கவு‌ம்.

வ‌ஞ்‌சிர‌ம் ‌பி‌ரியா‌ணி

Image
 வ‌ஞ்‌சிர‌ம் ‌பி‌ரியா‌ணி      தேவையானவை வ‌ஞ்‌சிர‌ம் ‌- 1ஃ2 ‌கிலோ பாசும‌தி ‌அ‌ரி‌சி - 1ஃ2 ‌கிலோ வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி - 5 ப‌ட்டை, லவ‌ங்க‌ம், ‌பி‌ரி‌ஞ்‌சி இலை - தேவையான அளவு இ‌ஞ்‌சி, பூ‌ண்டு வ‌ிழுது - 3 தே‌க்கர‌ண்டி பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி - ‌1 க‌ப் த‌‌யி‌ர் - 1 கப் ப‌‌ச்சை‌மிளகா‌ய் - 4 ‌மிளகா‌ய்‌த்தூ‌‌ள் - 3 தே‌க்கர‌ண்டி ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு - தேவையான அளவு எ‌ண்ணெ‌ய் - 1 க‌ப் எலு‌மி‌ச்சை - 1 செ‌ய்முறை ‌மீ‌ன் து‌ண்டுகளை சு‌த்த‌ம் செ‌ய்து உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் போ‌ட்டு ஊற‌விடவு‌ம். வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளியை நறு‌க்கவு‌ம்.  கு‌க்க‌‌ரி‌ல் எ‌ண்ண‌ெ‌ய் ஊ‌ற்‌றி ப‌ட்டை, லவ‌ங்க‌ம், ‌பி‌ரி‌‌ஞ்‌சி இலை, பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி போ‌ட்டு‌த் தா‌ளி‌க்கவு‌ம். வெ‌‌ங்காய‌ம், த‌க்கா‌ளி, இ‌ஞ்‌சி பூ‌ண்டு ‌விழுதை போ‌‌ட்டு வத‌க்கவு‌ம். த‌யி‌ர், ‌உ‌ப்பு, மிளகா‌ய்‌த் தூ‌ள், அ‌ரி‌சியை‌ப் போ‌ட்டு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ‌கிள‌றி‌விடவு‌ம். த‌ண்‌ணீ‌‌ர் கொ‌தி‌‌க்கு‌ம் போது வ‌ஞ்‌சிர‌ம் ‌மீ‌ன் து‌ண்டுகளை பர‌ப்‌பி கு‌க்கரை மூடவு‌ம். ‌ ஒரு ‌வி‌சி‌ல் வ‌ந்தது‌ம் கு‌க்கரை இற‌க்‌‌கி எலு‌மி‌ச்சை‌சாறை ‌பி‌ழி‌‌ந...

ஹனி சிக்கன்

Image
 ஹனி சிக்கன்  தேவையானவை: எலும்பு நீக்கப்பட்ட கோழிக்கறி - 1ஃ2 கிலோ மாவிற்கு... வெண்ணை - 4 ஸ்பூன்  சோளமாவு கரைசல் - 1ஃ2 கப் சமையல் சோடா - சிறிதளவு முட்டை - 1 ஒரு முட்டையிலிருந்து எடுக்கப்பட்ட வெள்ளை கரு சாஸ் செய்ய தேவையானவை  1 1ஃ2 ஸ்பூன் - எண்ணெய், நறுக்கிய இஞ்சி - 2 ஸ்பூன், நறுக்கிய பூண்டு - 3 ஸ்பூன், தேன் - 3 ஸ்பூன், வினிகர் - 1 ஸ்பூன், தண்ணீர் - 1ஃ2 கப்  செய்முறை  மாவு செய்வதற்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு 30 நிமிடங்கள் கழித்து அதனோடு சிக்கன் சேர்த்து பொரித்தெடுக்கவும். வானலியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி மற்றும் பூண்டினை வதக்கி அதனோடு உப்பு, தேன், வினிகர் மற்றும் தண்ணீர் சேர்த்து அதனோடு சோள மாவு கரைசலை சேர்த்து சிறிது நேரம் மிதமான சூட்டில் வைத்து இறக்கி, இந்த கலவையை பொறித்து வைத்த சிக்கனுடன் சேர்த்து பரிமாறவும்.