ஈரல் பொரியல்

 ஈரல் பொரியல் 


 





 




தேவையான பொருட்கள்


ஆட்டின் ஈரல் - 200 கிராம்

வெங்காயம் - 2

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

தயிர் - 50 கிராம்

மிளகு தூள் - 2 கிராம்

கொத்துமல்லி, கறிவேப்பிலை

உப்பு

தா‌ளி‌க்க சோ‌ம்பு, க‌றிவே‌ப்‌பிலை, எ‌ண்ணெ‌ய் 


தயாரிக்கும் முறை


ஆட்டின் ஈரலை வேகவைத்து பின்னர் அலசி வே‌ண்டு‌ம் அள‌வி‌ற்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


ஈரலில் உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். 


வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். ஒரு பச்சை மிளகாயையும் கீறிப் போட்டு வதக்கவும். 


பின்னர் ஈரலை வாணலியில் போட்டு லேசாகக் கிளறி விடவும்.


இறக்கும்போது கொத்துமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

Comments

Popular posts from this blog

மீன் கட்லெட்

காடை தம் பிரியாணி

மட்டன் தால்சா