மட்டன் தால்சா


மட்டன் தால்சா 



தேவையான பொருட்கள்:-


மட்டன் எலும்பு - 200 கிராம்


ஆட்டு கொழுப்பு - சிறிதளவு


துவரம் பருப்பு - 50 கிராம்


கடலைப்பருப்பு - 50 கிராம்


கத்தரிக்காய் - 2


வாழைக்காய் - 1/2 காய்


புளி - 10 கிராம்


மாங்காய் - 1/2


இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்


பச்சை மிளகாய் - 4


மஞ்சள் தூள் - 1ஃ2 டீஸ்பூன்


மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்


பட்டை - 5 கிராம்


பிரிஞ்சி இலை - 2


உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:- 


முதலில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பை நன்கு கழுவி, ஊற வைக்கவும். வாழைக்காய், கத்தரிக்காய், மாங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.


பிறகு ஒரு குக்கரில் ஊற வைத்த துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மட்டன் எலும்பு, சிறிது கொழுப்பு, கத்தரிக்காய், வாழைக்காய், மாங்காய், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவைக்கேற்ப உப்பு, தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும். 


தேவைப்பட்டால் புளியை கரைத்து அதனை பருப்பு வெந்தவுடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கலாம். 


கடைசியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, பிரிஞ்சி இலை தாளித்து இதனுடன் சேர்க்கவும்.

சுவையான மட்டன் தால்சா தயார்.


மட்டன் தால்சா


Comments

Popular posts from this blog

மீன் கட்லெட்

காடை தம் பிரியாணி