மீன் கட்லெட்

 மீன் கட்லெட் 





தேவையானவை:


மீன் - 1ஃ2 கிலோ

உருளைக்கிழங்கு - 2

வெங்காயம் - 100 கிராம்

பச்சைமிளகாய் - 5

சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்

மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

இஞ்சி,பூண்டுவிழுது - 1/4 ஸ்பூன்

ரஸ்க் - 4 

முட்டை - 4 

எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன் 

உப்பு - தேவைகேற்ப 

எண்ணெய் - தேவைகேற்ப 


செய்முறை: 


மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.


வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் பச்சைமிளகாய், இஞ்சி,பூண்டு விழுது ஆகியவற்றை வதக்கி மீன் கலவையில் சேர்க்கவும். அத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். 


மு‌ட்டையை (வெள்ளைக்கரு மட்டும்) ஒரு வா‌ய் அக‌‌ன்ற பா‌த்‌திர‌த்‌தி‌ல் உடை‌த்து ஊ‌ற்‌றி ந‌ன்கு அடி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.


ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு நன்கு காய்ந்த்தும் மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாகநமக்கு பிடித்த வடிவில் தட்டி முட்டையில் தோய்த்து ரஸ்க் தூளில் புரட்டி பொரித்தெடுக்கவும்.




Comments

Popular posts from this blog

காடை தம் பிரியாணி

மட்டன் தால்சா