சிக்கன் 65
சிக்கன் 65
தேவையான பொருட்கள்
சிக்கன் - முக்கால் கிலோ
சிக்கன் 65 மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டீஸ்பூன்
கார்ன் ப்ளோர் - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 1 பழம்
ரெட் கலர் - சிறிதளவு
உப்பு - அரை ஸ்பூன்
எண்ணெய் - 150 மில்லி.
செய்முறை
சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கி 5 தண்ணீர் வைத்து கழுவி நீர் வடிகட்டிக்கொள்ளவும்,பின்பு சிக்கனுடன், சிக்கன் 65 மசாலா,இஞ்சி பூண்டு பேஸ்ட், கார்ன்ஃப்ளோர், தயிர், எலுமிச்சை,உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
மசாலா கலந்த சிக்கனை சுமார் ஒரு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.
ஊறிய சிக்கனை கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் போட்டு பொரிக்கவும்.
சிக்கன் சிவந்து முறுக ஆரம்பித்ததும், கருவேப்பிலை போட்டு வெடித்ததும், கருவேப்பிலையுடன் சேர்த்து சிக்கனில் எண்ணெய் வடித்து விட்டு எடுக்கவும்.
சிக்கன் 65 ரெடி.

Comments
Post a Comment