இறால் சுக்கா மசாலா


இறால் சுக்கா மசாலா

Prawn Chukka Masala 



தேவையான பொருட்கள்:-


இறால் - அரை கிலோ


தேங்காய் - 1/2 கப்


வர மிளகாய் - 5


பூண்டு - 4 பற்கள்


கறிவேப்பிலை - சிறிதளவு


சோம்பு - 2 ஸ்பூன்


தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்


பெரிய வெங்காயம் - 1


மஞ்சள் தூள் - 1 1/2 ஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


மிளகுத்தூள் - 2 ஸ்பூன்


கரம் மசாலா - 1 ஸ்பூன்


செய்முறை:-


முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


பிறகு இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.


தேங்காய், வர மிளகாய், சோம்பு, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து மிக்சியில் பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். 


 அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.


பின்னர் சுத்தம் செய்த இறால், மஞ்சள் தூள், உப்பு ஆகியவை ஒன்றுடன் ஒன்று சேரும் வரை கிளற வேண்டும்.


 அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்.


 கடைசியில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான இறால் சுக்கா தயார்

Comments

Popular posts from this blog

மீன் கட்லெட்

காடை தம் பிரியாணி

மட்டன் தால்சா