செட்டிநாடு மட்டன் குருமா
செட்டிநாடு மட்டன் குருமா!!
தேவையானப் பொருட்கள் :
மட்டன் - 1 கிலோ
நல்லெண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
புதினா - சிறிதளவு
தயிர் - 3 டீஸ்பூன்
முந்திரி - 250 கிராம் (விழுதாக அரைத்தது)
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
பட்டை - 3
கிராம்பு - 4
ஏலக்காய் - 3
மிளகு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 3
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் விழுது - 4 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் மட்டனை நன்றாக கழுவி தனியாக வைக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் மட்டன், இஞ்சி, பூண்டு விழுது, பாதி அளவு தக்காளி, மஞ்சள் தூள், தயிர், மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, முந்திரி விழுது, புதினா இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்துப் பிசைந்து, 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின் மீதமுள்ள தக்காளி மற்றும் தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத் தூள், தேவையான உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும். கடைசியாக ஊறவைத்துள்ள மட்டன் கலவையை சேர்த்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
பிறகு விசில் அடங்கியவுடன் குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள முந்திரி விழுது மற்றும் தேங்காய் விழுதைச் சேர்த்து, அத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு மட்டன் குருமா தயார்!!!

Comments
Post a Comment