சிக்கன் தொக்கு
சிக்கன் தொக்கு
தேவையான பொருட்கள்:-
சிக்கன் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
பட்டை, லவங்கம் - தலா 2 துண்டுகள்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:-
முதலில் சிக்கனை கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
பின்பு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும். பிறகு சிக்கனை சேர்த்து வதக்கவும்.
சிக்கனில் கலவை நன்றாக சேர்ந்து வரும்படி கலந்து விடவும். தண்ணீர் விட வேண்டாம். சிக்கனில் இருக்கும் நீரும், தக்காளி சாறும் எண்ணெய்யும் சிக்கனை வேக வைக்கும்.
சிக்கன் நன்றாக வெந்த பிறகு மிளகுத்தூள் சேர்த்து கிளறி கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான சிக்கன் தொக்கு தயார்

Comments
Post a Comment