Posts

Showing posts from October, 2024

காடை தம் பிரியாணி

Image
காடை தம் பிரியாணி தேவையானவை:  காடை – 4,  சீரகச் சம்பா அரிசி - 750 கிராம்,  பெரிய வெங்காயம்- 150 கிராம்,  தக்காளி - 100 கிராம்,  பச்சை மிளகாய் – 5,  புதினா இலை,  கொத்தமல்லித்தழை - 50 கிராம்,  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,  மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,  தயிர் - 50 மில்லி,  தேங்காய்ப்பால் - 100 மில்லி,  பட்டை, ஏலக்காய் – 2,  கிராம்பு – 4,  பிரிஞ்சி இலை – ஒன்று,  இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்,  உப்பு - தேவையான அளவு,  எண்ணெய் - 100 மில்லி,  நெய் - 50 மில்லி. பிரியாணி மசாலா செய்ய:   பட்டை – 2,  ஏலக்காய் – 4,  கிராம்பு – 6,  பூண்டு - 50 கிராம்,  இஞ்சி-1 துண்டு. செய்முறை:  சீரகச் சம்பா அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும். பிரியாணி மசாலாவுக்கு தேவையான பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை...

மட்டன் குழம்பு

Image
  மட்டன் குழம்பு! தேவையானவை:   மட்டன் - அரை கிலோ பெரிய வெங்காயம்  - 100 கிராம்,  இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,  கொத்தமல்லித்தழை – சிறிதளவு,  எண்ணெய் - 30 மில்லி,  உப்பு – தேவைக்கேற்ப. அரைக்க:   நறுக்கிய பெரிய வெங்காயம் - 50 கிராம்,  தேங்காய்த்துருவல் - 30 கிராம்,  காய்ந்த மிளகாய் – 8,  முழுமல்லி - 2 டீஸ்பூன்,  சீரகம் - அரை டீஸ்பூன்,  வெள்ளை எள் - ஒன்றரை டீஸ்பூன்,  கசகசா - 2 டீஸ்பூன், கிராம்பு – 2 செய்முறை:  மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து, ஆறவைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கி, பின்னர் ஊறவைத்திருக்கும் மட்டனைச் சேர்த்து நன்றாக வதக்கவும்...

ஈரல் பொரியல்

Image
 ஈரல் பொரியல்      தேவையான பொருட்கள் ஆட்டின் ஈரல் - 200 கிராம் வெங்காயம் - 2 இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி தயிர் - 50 கிராம் மிளகு தூள் - 2 கிராம் கொத்துமல்லி, கறிவேப்பிலை உப்பு தா‌ளி‌க்க சோ‌ம்பு, க‌றிவே‌ப்‌பிலை, எ‌ண்ணெ‌ய்  தயாரிக்கும் முறை ஆட்டின் ஈரலை வேகவைத்து பின்னர் அலசி வே‌ண்டு‌ம் அள‌வி‌ற்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஈரலில் உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். ஒரு பச்சை மிளகாயையும் கீறிப் போட்டு வதக்கவும்.  பின்னர் ஈரலை வாணலியில் போட்டு லேசாகக் கிளறி விடவும். இறக்கும்போது கொத்துமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

நண்டு ரசம்

Image
நண்டு ரசம்    தேவையானவை  நண்டு கால்கள் - 10 புளி - நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு ஒரு முழு பூண்டு ரச‌ப் பொடி - 3 தே‌‌க்கர‌ண்டி ம‌ஞ்ச‌ள் பொடி - 1ஃ2 தே‌க்கர‌ண்டி காய்ந்த மிளகாய் - 4 கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு, எண்ணெய் - தா‌ளி‌க்க செய்யு‌ம் முறை நண்டின் கால்களை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து அ‌ம்‌மி‌க் குழ‌வி அ‌ல்லது ம‌த்து வை‌த்து அத‌ன் ஓடுக‌ள் உடைபடு‌ம் அள‌வி‌ற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.  பூ‌ண்டையு‌ம் நசு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். பு‌ளியை ரச‌த்‌தி‌ற்கு ஏ‌ற்றவாறு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கரை‌த்து வை‌த்து‌க் கொ‌‌ள்ளு‌ங்க‌ள். பு‌ளி‌க் கரைச‌லி‌ல், ரச‌‌ப்பொடி, உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் பொடி, த‌ட்டி வை‌த்‌தி‌ரு‌க்கு‌ம் ந‌ண்டு கா‌ல்க‌ள், பூ‌ண்டு ‌விழுது ஆ‌கியவ‌ற்றை‌ப் போடவு‌ம். ரச‌த்தை தா‌ளி‌த்து அடு‌ப்‌பி‌ல் வை‌த்து கொ‌தி‌க்க ‌விடவு‌ம்.  ந‌ண்டு வெ‌ந்து, ரச‌ம் கொ‌தி‌த்தது‌ம் கொ‌த்தும‌ல்‌லி, ‌க‌றிவே‌ப்‌பிலை தழைகளை‌ப் போ‌ட்டு இற‌க்கவு‌ம்.

வ‌ஞ்‌சிர‌ம் ‌பி‌ரியா‌ணி

Image
 வ‌ஞ்‌சிர‌ம் ‌பி‌ரியா‌ணி      தேவையானவை வ‌ஞ்‌சிர‌ம் ‌- 1ஃ2 ‌கிலோ பாசும‌தி ‌அ‌ரி‌சி - 1ஃ2 ‌கிலோ வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி - 5 ப‌ட்டை, லவ‌ங்க‌ம், ‌பி‌ரி‌ஞ்‌சி இலை - தேவையான அளவு இ‌ஞ்‌சி, பூ‌ண்டு வ‌ிழுது - 3 தே‌க்கர‌ண்டி பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி - ‌1 க‌ப் த‌‌யி‌ர் - 1 கப் ப‌‌ச்சை‌மிளகா‌ய் - 4 ‌மிளகா‌ய்‌த்தூ‌‌ள் - 3 தே‌க்கர‌ண்டி ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு - தேவையான அளவு எ‌ண்ணெ‌ய் - 1 க‌ப் எலு‌மி‌ச்சை - 1 செ‌ய்முறை ‌மீ‌ன் து‌ண்டுகளை சு‌த்த‌ம் செ‌ய்து உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் போ‌ட்டு ஊற‌விடவு‌ம். வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளியை நறு‌க்கவு‌ம்.  கு‌க்க‌‌ரி‌ல் எ‌ண்ண‌ெ‌ய் ஊ‌ற்‌றி ப‌ட்டை, லவ‌ங்க‌ம், ‌பி‌ரி‌‌ஞ்‌சி இலை, பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி போ‌ட்டு‌த் தா‌ளி‌க்கவு‌ம். வெ‌‌ங்காய‌ம், த‌க்கா‌ளி, இ‌ஞ்‌சி பூ‌ண்டு ‌விழுதை போ‌‌ட்டு வத‌க்கவு‌ம். த‌யி‌ர், ‌உ‌ப்பு, மிளகா‌ய்‌த் தூ‌ள், அ‌ரி‌சியை‌ப் போ‌ட்டு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ‌கிள‌றி‌விடவு‌ம். த‌ண்‌ணீ‌‌ர் கொ‌தி‌‌க்கு‌ம் போது வ‌ஞ்‌சிர‌ம் ‌மீ‌ன் து‌ண்டுகளை பர‌ப்‌பி கு‌க்கரை மூடவு‌ம். ‌ ஒரு ‌வி‌சி‌ல் வ‌ந்தது‌ம் கு‌க்கரை இற‌க்‌‌கி எலு‌மி‌ச்சை‌சாறை ‌பி‌ழி‌‌ந...

ஹனி சிக்கன்

Image
 ஹனி சிக்கன்  தேவையானவை: எலும்பு நீக்கப்பட்ட கோழிக்கறி - 1ஃ2 கிலோ மாவிற்கு... வெண்ணை - 4 ஸ்பூன்  சோளமாவு கரைசல் - 1ஃ2 கப் சமையல் சோடா - சிறிதளவு முட்டை - 1 ஒரு முட்டையிலிருந்து எடுக்கப்பட்ட வெள்ளை கரு சாஸ் செய்ய தேவையானவை  1 1ஃ2 ஸ்பூன் - எண்ணெய், நறுக்கிய இஞ்சி - 2 ஸ்பூன், நறுக்கிய பூண்டு - 3 ஸ்பூன், தேன் - 3 ஸ்பூன், வினிகர் - 1 ஸ்பூன், தண்ணீர் - 1ஃ2 கப்  செய்முறை  மாவு செய்வதற்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு 30 நிமிடங்கள் கழித்து அதனோடு சிக்கன் சேர்த்து பொரித்தெடுக்கவும். வானலியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி மற்றும் பூண்டினை வதக்கி அதனோடு உப்பு, தேன், வினிகர் மற்றும் தண்ணீர் சேர்த்து அதனோடு சோள மாவு கரைசலை சேர்த்து சிறிது நேரம் மிதமான சூட்டில் வைத்து இறக்கி, இந்த கலவையை பொறித்து வைத்த சிக்கனுடன் சேர்த்து பரிமாறவும்.

தந்தூரி சிக்கன்

Image
தந்தூரி சிக்கன்      தந்தூரி சிக்கனை சமைக்க ஓவன் வேண்டும். தேவையான பொருட்கள் கோழி - 1 முழுதாக பெரிய வெங்காயம் - 5 இஞ்சி, பூண்டு  மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி தனியா தூள்- 1 தேக்கரண்டி வினிகர் - 2 தேக்கரண்டி தயிர் - அரை கப் வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி எலுமிச்சம் பழம் உப்பு கிராம்பு தூள் செய்யும் முறை இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். தயிரை அடித்து அதனுடன் இந்த விழுதையும், மிளகாய் தூள், தனியாத்தூள், சீரகம், கிராம்பு தூள், வினிகர், எலுமிச்சாம் சாறு, வெண்ணெய், உப்பு எல்லாம் சேர்த்து கிளறி வைக்கவும். கோழியை முழுசாக வைத்துக் கொண்டு வயிற்றுப் பகுதியை மட்டும் கீறி சுத்தம் செய்யவும். இப்படியே கடையில் கேட்டாலும் தருவார்கள். தசைப் பகுதியில் அங்கங்கே கத்தியால் கீறிவிடவும். தயிரில் கலந்த மசாலாவை வயிற்றுப் பகுதியில் கொஞ்சம் வைக்கவும். மீதத்தை கோழியின் மீது நன்கு தடவி சில மணி நேரம் ஊற வைக்கவும். ஊறவைத்த கோழியை ஓவனில் வேக விடவும். 20 அல்லது 40 நிமிடங்களில் தந்தூரி சிக்கன் தயார்.

மட்டன் பிரியாணி

Image
 மட்டன் பிரியாணி      தேவையான பொருட்கள்  மட்டன் -1/2 கிலோ அரிசி -1/2 கிலோ எண்ணெய் – 50 கிராம் நெய் – 150 கிராம் பட்டை 2 துண்டு  கிராம்பு 4 ஏலக்காய் 3 வெங்காயம் 1/4 கிலோ தக்காளி 1/4 கிலோ இஞ்சி , பூண்டு – 3 மே.கரண்டி  கொ. மல்லி ஒரு கட்டு புதினா 1/2 கட்டுப.  மிள்காய் 8 தயிர் 1/4 கப்  சிகப்பு மிளகாய் தூள் 3 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி 1 தேக்கரண்டி  ரெட்கலர் பொடி 1 சிட்டிகை  எலுமிச்சை பழம் 1 நெய் ஒரு டீஸ்பூன் செய்முறை: பிரியாணி பாத்திரத்தில் எண்ணெய் நெய் ஊற்றி நல்ல கய்ந்ததும் பட்டை , கிராம்பு , எலக்காய் போடவும்.அது வெடித்ததும் நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி விடவும். நல்ல பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும். ஓவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேண்டும்.அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும். பிறகு கொத்தமல்லி புதினா வை போட்டு கிளறவும் அதன் பின் தக்காளி ப.மிளகாய் போடவும். இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். எ...

ஆட்டுக்கால் சூப்

Image
 ஆட்டுக்கால் சூப்      தேவையானவை ஆட்டுக்கால் - 4 சீரகம் - 2 தேக்காரண்டி வெங்காயம் - 4 த‌க்கா‌ளி - 1 மிளகு - 3 தேக்கரண்டி தனியா - 2 தேக்கரண்டி இ‌ஞ்‌சி - 1 து‌ண்டு பூண்டு - 10 ப‌ல்  ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - 1 ‌சி‌ட்டிகை ‌உ‌ப்பு - ‌சி‌றிது  செ‌ய்யு‌ம் முறை ஆட்டுக்கால்களை சுத்தம் செய்து கு‌க்க‌ரி‌ல் போடவு‌ம். ‌மிளகு, ‌சீரக‌ம், த‌னியா, 1 வெ‌ங்காய‌ம், பூ‌ண்டு, இ‌ஞ்‌சி ஆ‌கியவ‌ற்றை ‌விழுதாக அரை‌த்து‌ கு‌க்க‌ரி‌ல் போடவு‌ம். தேவையான அள‌வி‌ற்கு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி, நறு‌க்‌கிய வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி, ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு சே‌ர்‌த்து அடுப்பில் வைக்கவும். 8 முத‌ல் 10 ‌வி‌சி‌ல்க‌ள் வை‌த்து வேக ‌விடவு‌ம். வாண‌லி‌யி‌ல் எண்ணெய் ஊற்றி, சோ‌ம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வேக வைத்த கால் சூ‌ப்புட‌ன் சேர்‌த்து ப‌‌ரிமாறவும்.

மீன் கட்லெட்

Image
 மீன் கட்லெட்  தேவையானவை: மீன் - 1ஃ2 கிலோ உருளைக்கிழங்கு - 2 வெங்காயம் - 100 கிராம் பச்சைமிளகாய் - 5 சீரகத்தூள் - 1/2 ஸ்பூன் மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் இஞ்சி,பூண்டுவிழுது - 1/4 ஸ்பூன் ரஸ்க் - 4  முட்டை - 4  எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்  உப்பு - தேவைகேற்ப  எண்ணெய் - தேவைகேற்ப  செய்முறை:  மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் பச்சைமிளகாய், இஞ்சி,பூண்டு விழுது ஆகியவற்றை வதக்கி மீன் கலவையில் சேர்க்கவும். அத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.  மு‌ட்டையை (வெள்ளைக்கரு மட்டும்) ஒரு வா‌ய் அக‌‌ன்ற பா‌த்‌திர‌த்‌தி‌ல் உடை‌த்து ஊ‌ற்‌றி ந‌ன்கு அடி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு நன்கு காய்ந்த்தும் மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாகநமக்கு பிடித்த வடிவில் தட்டி முட்டையில் தோய்த்து ரஸ்க் தூளில் புரட்டி பொரித்தெடுக்கவும்.

சில்லி சிக்கன் கிரேவி

Image
 சில்லி சிக்கன் கிரேவி               தேவையான பொருட்கள்                எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ  வெங்காயம் – 1 (நறுக்கியது)  தக்காளி – 1 (நறுக்கியது)  குடைமிளகாய் – 1/2 (நறுக்கியது)  இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்  சோயா சாஸ் – 2 டீஸ்பூன்  தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்  சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்  பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)  வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்  மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்  கரம் மசாலா – 1 டீஸ்பூன்  எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்  உப்பு – தேவையான அளவு                          செய்முறை                          முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.  பின் அந்த சிக்கனுடன் 1/2 டீஸ்பூன் சோயா சாஸ், வினிகர், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்துக் க...

சிக்கன் 65

Image
சிக்கன் 65                தேவையான பொருட்கள்              சிக்கன் - முக்கால் கிலோ சிக்கன் 65 மசாலா - 1 டேபிள்ஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் தயிர் - 1 டீஸ்பூன்  கார்ன் ப்ளோர் - 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் - 1 பழம் ரெட் கலர் - சிறிதளவு   உப்பு - அரை ஸ்பூன் எண்ணெய் - 150 மில்லி.                          செய்முறை                          சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கி 5 தண்ணீர் வைத்து கழுவி நீர் வடிகட்டிக்கொள்ளவும்,பின்பு சிக்கனுடன், சிக்கன் 65 மசாலா,இஞ்சி பூண்டு பேஸ்ட், கார்ன்ஃப்ளோர், தயிர், எலுமிச்சை,உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். மசாலா கலந்த சிக்கனை சுமார் ஒரு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். ஊறிய சிக்கனை கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் போட்டு பொரிக்கவும். சிக்கன் சிவந்து முறுக ஆரம்பித்ததும், கருவேப்பிலை போட்டு வெடித்ததும், கருவேப்பிலையுடன் சேர்த்து சிக...

சிக்கன் பிரியாணி

Image
 சிக்கன் பிரியாணி    தேவையான பொருட்கள்              சிக்கன் - 1 கிலோ பாஸ்மதி அரிசி - 3 கப் நெய் - 5 தேக்கரண்டி வெண்ணெய் - 3 தேக்கரண்டி பிரின்ஞி இலை - 2 ஏலகாய் தூள் - இரு சிட்டிகை பட்டை - 4 லவங்கம் - 5 சோம்பு - 1 தேக்கரண்டி இஞ்சி - 1 பெரியது பூண்டு - 1 பெரியது வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 10 மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப புதினா - 1/2 கப் கொத்தமல்லி இலை - 1/2 கப் தக்காளி - 3 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு - 1 பெரியது நெய் - 3 தேக்கரண்டி                          செய்முறை                          குக்கரில் எண்ணெய்,நெய்  விட்டு காய்ந்ததும் பிரிஞ்ஜி இலை, சோம்பு,ஏலகாய் தூள் சேர்க்க வேண்டும்.  பின்னர் பட்டை, லவங்கம்,சோம்பு,இஞ்சி,பூண்டுஆகியவற்றை குக்கரில் போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை  வதக்க வேண்டும்.  பின்னர்  வெங்காயம்,பச்சை மிளக...

செட்டிநாடு சிக்கன் குழம்பு

Image
செட்டிநாடு சிக்கன் குழம்பு தேவையான பொருட்கள் : சிக்கன் அரை கிலோ பெரிய வெங்காயம் 1 தக்காளி 3 இஞ்சி பூண்டு விழுது ஒன்றரை டீஸ்பூன் கொத்தமல்லித் தழை ஒரு கைப்பிடி கறிவேப்பிலை 2 கொத்து மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப எண்ணெய் தேவைக்கேற்ப வறுத்து அரைக்க: தேங்காய் துருவல் - அரை கப் காய்ந்த மிளகாய் - 6 கசகசா - 2 டீஸ்பூன் தனியா - 5 டேபிள் ஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் கிராம்பு - 1 பட்டை - 1 சோம்பு - 1 டீஸ்பூன் செய்முறை :   வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, தனியா, சீரகம், சோம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.   அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.   அதன் பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அனைத்தையும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.   மறுபடியும் வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.   அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக...

செட்டிநாடு மட்டன் குருமா

Image
செட்டிநாடு மட்டன் குருமா!! தேவையானப் பொருட்கள் : மட்டன் - 1 கிலோ நல்லெண்ணெய் - தேவையான அளவு இஞ்சி, பூண்டு விழுது - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் சோம்பு தூள் - 1 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு புதினா - சிறிதளவு தயிர் - 3 டீஸ்பூன் முந்திரி - 250 கிராம் (விழுதாக அரைத்தது) சீரகம் - 1 டீஸ்பூன் சோம்பு - 2 டீஸ்பூன் பட்டை - 3 கிராம்பு - 4 ஏலக்காய் - 3 மிளகு - 1 டீஸ்பூன் வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 4 தக்காளி - 3 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தேங்காய் விழுது - 4 டீஸ்பூன் நெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு செய்முறை : முதலில் தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் மட்டனை நன்றாக கழுவி தனியாக வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மட்டன், இஞ்சி, பூண்டு விழுது, பாதி அளவு தக்காளி, மஞ்சள் தூள், தயிர், மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, முந்திரி விழுது, புதினா இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்துப் பிசைந்து, 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து நல்...

சிக்கன் தொக்கு

Image
சிக்கன் தொக்கு தேவையான பொருட்கள்:- சிக்கன் - கால் கிலோ பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1 இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி பட்டை, லவங்கம் - தலா 2 துண்டுகள் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை:- முதலில் சிக்கனை கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.  பின்பு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும். பிறகு சிக்கனை சேர்த்து வதக்கவும்.  சிக்கனில் கலவை நன்றாக சேர்ந்து வரும்படி கலந்து விடவும். தண்ணீர் விட வேண்டாம். சிக்கனில் இருக்கும் நீரும், தக்காளி சாறும் எண்ணெய்யும் சிக்கனை வேக வைக்கும்.  சிக்கன் நன்றாக வெந்த பிறகு மிளகுத்தூள் சேர்த்து கிளறி கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.  சுவையான சிக்கன் தொக்கு தயா...

மட்டன் தால்சா

Image
மட்டன் தால்சா  தேவையான பொருட்கள்:- மட்டன் எலும்பு - 200 கிராம் ஆட்டு கொழுப்பு - சிறிதளவு துவரம் பருப்பு - 50 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் கத்தரிக்காய் - 2 வாழைக்காய் - 1/2 காய் புளி - 10 கிராம் மாங்காய் - 1/2 இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம் பச்சை மிளகாய் - 4 மஞ்சள் தூள் - 1ஃ2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் பட்டை - 5 கிராம் பிரிஞ்சி இலை - 2 உப்பு - தேவைக்கேற்ப செய்முறை:-  முதலில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பை நன்கு கழுவி, ஊற வைக்கவும். வாழைக்காய், கத்தரிக்காய், மாங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு குக்கரில் ஊற வைத்த துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மட்டன் எலும்பு, சிறிது கொழுப்பு, கத்தரிக்காய், வாழைக்காய், மாங்காய், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவைக்கேற்ப உப்பு, தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.  தேவைப்பட்டால் புளியை கரைத்து அதனை பருப்பு வெந்தவுடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கலாம்.  கடைசியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, பிரிஞ்சி இலை தாளித்து இதனுடன் சேர்க்கவும். சுவையான மட்...

இறால் சுக்கா மசாலா

Image
இறால் சுக்கா மசாலா Prawn Chukka Masala  தேவையான பொருட்கள்:- இறால் - அரை கிலோ தேங்காய் - 1/2 கப் வர மிளகாய் - 5 பூண்டு - 4 பற்கள் கறிவேப்பிலை - சிறிதளவு சோம்பு - 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 மஞ்சள் தூள் - 1 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகுத்தூள் - 2 ஸ்பூன் கரம் மசாலா - 1 ஸ்பூன் செய்முறை:- முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தேங்காய், வர மிளகாய், சோம்பு, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து மிக்சியில் பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.   அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். பின்னர் சுத்தம் செய்த இறால், மஞ்சள் தூள், உப்பு ஆகியவை ஒன்றுடன் ஒன்று சேரும் வரை கிளற வேண்டும்.  அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்.  கடைசியில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான இறால் சுக்கா தயார்